வி.ஏ.ஓ.,வின் லஞ்ச பட்டியலை பேனர் வைத்த பொதுமக்கள்: பின்னணி என்ன?

வி.ஏ.ஓ.,வின் லஞ்ச பட்டியலை பேனர் வைத்த பொதுமக்கள்: பின்னணி என்ன?
X
அவினாசி அருகே வி.ஏ.ஓ., லஞ்சம் வாங்குவதாக சுட்டிக்காட்டி வைக்கப்பட்ட ‘பிளக்ஸ் பேனர்’ பின்னணியில் உள்ள விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவினாசி அருகே கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பல்வேறு சான்றிதழ்களுக்கு லஞ்சம் வாங்குவதாக சுட்டிக்காட்டி வைக்கப்பட்ட 'பிளக்ஸ் பேனர்' பின்னணியில் உள்ள விவகாரம் குறித்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், செம்பியநல்லுார் கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிபவர் ஸ்ரீலதா. இவர் சான்றிதழ் வழங்குவதற்கான பரிந்துரை கையொப்பம் இட பெரும் தொகையை லஞ்சமாக பெறுவதாகக் கூறி பொதுமக்கள் தரப்பில் 'பிளக்ஸ் பேனர்' வைக்கப்பட்டது.

அதில், பட்டா, சிட்டாவுக்கு ரூ.5,000, இறப்பு சான்றிதழ் வாங்க ரூ.2,000, அடங்கலுக்கு ரூ.1,000, வாரிசு சான்றிதழுக்கு ரூ.5,000 , வருமான சான்று வாங்க ரூ.3,000, திருமண பதிவு சான்றிதழ் வாங்க, இருப்பிட சான்று வாங்க,விதவை சான்று வாங்க, பிறப்பிட சான்றிதழுக்கு ரூ.1,000 என அவர் லஞ்சம் வாங்குவதாக அந்த பேனரில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

வி.ஏ.ஓ., ஸ்ரீ லதாவிடம் கேட்டபோது, ''ஊராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிக்கு, தனிப்பட்ட சிலரின் பயன்பாட்டில் இருந்த நிலத்தை அளவீடு செய்யும் போது, அது அரசு நிலமாக இருந்தது. அந்நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கூறினேன். இதில் காழ்ப்புணர்ச்சி கொண்டு இத்தகைய பேனரை அச்சடித்துள்ளனர்'' என்றார். ஆனால் அந்த தனிநபர் யார் என்ற விவரத்தை அவர் கூறவில்லை.

இந்நிலையில் அவர் லஞ்சம் வாங்குவதில்லை என சிலரும், லஞ்சம் வாங்குகிறார் என சிலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள உண்மை நிலை குறித்து போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!