புத்தகங்களுடன் புத்தாண்டு: அவினாசியில் நாளை கண்காட்சி துவக்கம்

புத்தகங்களுடன் புத்தாண்டு: அவினாசியில்   நாளை கண்காட்சி துவக்கம்
X

கோப்பு படம் 

அவினாசியில், நாளை துவங்கி, மூன்று நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், புத்தங்களுடன் புத்தாண்டு என்ற கருத்தை மையமாக வைத்து, 'அவிநாசி புத்தக திருவிழா' பெயரில், புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

நாளை (31ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு, அவிநாசி, வடக்கு ரத வீதியில் உள்ள கோவம்ச சமூகத்தார் மண்டபத்தில் நடக்க இருக்கிறது. வரும், 2ம் தேதி வரை தினமும், காலை, 10:00 மணி முதல், இரவு, 10:00 மணிவரை இக்கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது.

மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று பயன் பெற வேண்டும் என, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
ai marketing future