திருமுருகன்பூண்டியில் பா.ஜ., தெருமுனை பிரசாரம்

திருமுருகன்பூண்டியில் பா.ஜ., தெருமுனை பிரசாரம்
X

திருமுருகன் பூண்டியில் பா.ஜ., தெருமுனை பிரசாரம் நடந்தது 

திருமுருகன்பூண்டியில், பா.ஜ., அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் நடந்த தெருமுனை பிரசாரத்துக்கு, மண்டல தலைவர் சண்முகம்பாபு தலைமை வகித்தார். பிரசார அணி மாவட்ட செயலாளர் ரமணி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நகர செயலாளர் சிவதாஸ், பொது செயலாளர் ஜெயபிரகாஷ், பிரசார அணி மண்டல தலைவர் கந்தசாமி, கல்வியாளர் பிரிவு அன்புராணி, அமைப்பு சாரா பிரிவைச் சேர்ந்த பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!