பா.ஜ., சார்பில், 'ஆரோக்கிய பாரதம்' நிகழ்ச்சி

பா.ஜ., சார்பில்,  ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சி
X

அவிநாசி மக்கள் மருந்தகத்தில் மருந்து வாங்கி பயனடையும் நோயாளிகளிடம் குறை கேட்டறிந்த பாஜக மாவட்ட மருத்துவ அணியின் துணை தலைவர் சுந்தரம்.

பாஜ சார்பில் ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது.

அவிநாசியில் பா.ஜ., சார்பில், 'ஆரோக்கிய பாரதம்' நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட மருத்துவ அணியின் துணை தலைவர் சுந்தரம், அவிநாசி மக்கள் மருந்தகத்தில் மருந்து வாங்கி பயனடையும் நோயாளிகளிடம் குறை கேட்டறிந்தார். மருந்தகத்தில் விற்கப்படும் மருந்துகள் பயன்தருகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், திருமுருகன்பூண்டி மண்டல தலைவர் சண்முகபாபு, அவிநாசி நகர தலைவர் தினேஷ்குமார், முன்னாள் தலைவர் சுரேஷ் குமார், ஊடகப்பிரிவின் மாவட்ட துணை தலைவர் சந்துரு, கலை கலாசார பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். மருந்தகத்தின் உரிமையாளர் பிரதீப், பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.

Next Story
ai based agriculture in india