பாஜகவுக்கு அ.தி.மு.க. ஆதரவு? திருமுருகன்பூண்டி நகராட்சியில் திருப்பம்

பாஜகவுக்கு அ.தி.மு.க. ஆதரவு? திருமுருகன்பூண்டி நகராட்சியில் திருப்பம்
X
திருமுருகன்பூண்டி நகராட்சியில், அ.தி.மு.க. சார்பில் மூன்று வார்டில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாத நிலையில், பா.ஜ.க.வுக்கு மறைமுக ஆதரவளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து, பா.ஜ.க. வெளியேறிய நிலையில், 27 வார்டுகளிலும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால், 10வது வார்டில் அ.தி.மு.க.,சார்பில் அறிவிக்கப்பட்ட வார்டு பிரதிநிதி கலைவாணன் மனு தாக்கல் செய்யவில்லை. அங்கு, பா.ஜ.க. சார்பில் ஜெயபிரகாஷ், கார்த்திக் என, இருவர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், 13வது வார்டில், அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட வார்டு செயலாளர் பாஸ்கரன், மனு தாக்கல் செய்யவில்லை. இந்த வார்டில், பா.ஜ.க. சார்பில் நகர பொறுப்பாளர் சண்முகபாபு போட்டியிடுகிறார். 19வது வார்டில், அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட, கட்சி உறுப்பினர் பாப்பாத்தி மனு தாக்கல் செய்யவில்லை. இங்கு பா.ஜ.க. சார்பில் மெர்சி ரோஸ்லின்மேரி போட்டியிடுகிறார். மறைமுகமாக அதிமுகவினர் பா.ஜ.க. வுக்கு ஆதரவளிக்கின்றனர் என, தி.மு.க. உள்ளிட்ட எதிரணியினர் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!