அவினாசி அரசு கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

அவினாசி அரசு கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா
X

அவினாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. 

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று (ஏப்ரல் 30) கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. காலை 10.30 மணி அளவில் தொடங்கிய விழாவில், கல்லூரி முதல்வர் ஜோ. நளதம், கல்லூரி துவங்கிய நாள் முதல், இன்று வரை நடைபெற்ற அனைத்து சாதனைகளையும் செயல்பாடுகளையும் அறிக்கையாக சமர்ப்பித்தார்.ஆ

ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

அதைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் பிரசன்ன குமார், இக்கல்வி ஆண்டில் நடந்த விளையாட்டு போட்டிகள் பற்றியும், மாணவர்கள் பிற கல்லூரிகளில் படைத்த சாதனைகளையும் பட்டியலிட்டார். விழாவின் சிறப்பு விருந்தினரான, சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பி.கே ஆறுமுகம், மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றியும் யோகா பற்றியும் அறிவுரை வழங்கினார். மேலும் கழிப்பிட வசதி மற்றும் கணினி உபகரணங்கள் ஏற்பாடு செய்வதாக கூறினார்.


அதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, கல்லூரி முதல்வர் சான்றிதழ்களை வழங்கினார்.

Tags

Next Story
photoshop ai tool