அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; பராமரிப்பு பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; பராமரிப்பு பணி தீவிரம்
X

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், பராமரிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது.

Tirupur News,Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பராமரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரானது, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த என பல்வேறு சிறப்புகளைப் பெற்ற கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் 3-வது பெரிய தேர் உடைய கோவில் என்ற சிறப்பு பெற்றது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுப்பது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே பக்தர்களும், ஆன்மிகச் சான்றோர்களும் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி கோவில் நிர்வாகத்தின் மூலம் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதனை தொடர்ந்து அரச மரத்தடி விநாயகர் பீடம் மராமத்து செய்தல், சுவாமி சன்னதி விமானம் மாறாமல் செய்து பஞ்சவர்ணம் பூசுதல், அம்மன் சன்னதி விமானம் மராமத்து செய்து பஞ்சவர்ணம் பூசுதல், சூரியன் சன்னதி விமானம் மாறாமல் செய்து தஞ்சை காரணம் பூசுதல், பழைய கட்டுமானங்களின் மேல் உள்ள புதிய சிமெண்ட் கட்டுமானங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

அம்மன் சன்னதி முன்புறம் கல்வெட்டுகளை மறைத்து கட்டப்பட்டுள்ள சிங்கமுக படிக்கட்டுகளை அகற்றுதல், நுழைவு மண்டபத்தில் துணை சுற்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானத்தை அகற்றுதல், வடக்கு பிரகார திருமாழிக ஒபத்திமண்டப அடைப்புகளை அகற்றுதல், திருக்கல்யாண மண்டபத்திற்கும், சிவன் சன்னதி சுற்றுச்சூழுக்கும் இடையில் உள்ள சிமெண்டு தரைதளத்தை அகற்றுதல் பணிகள் நடக்கிறது.

பஞ்சவர்ணம் நடராஜர் சன்னதி சிமெண்டு படிக்கட்டுகளை அகற்றுதல்,சிவன் சன்னதி உள்பிரகாரம் கல்வெட்டுகள் தெரியும் வண்ணம் செய்தல், 5 நிலை ராஜகோபுரம் மராமத்து செய்து பஞ்சவர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் விரைந்து நடந்து வருகிறது. இதற்கான செலவினங்கள் உபயதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாகவும், கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!