அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு! கிடைத்தது வல்லுநர்குழு அனுமதி
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில்.
பழமை வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த, 'திருப்பணி வல்லுநர் குழு' அனுமதியளித்துள்ளதை தொடர்ந்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானதாக, அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்ட கோவிலாகவும் விளங்குகிறது.
சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த, 1980ல், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதன் பிறகு, 1991 மற்றும், 2008ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. பொதுவாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகி விட்டது.
எனவே, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்தாண்டு, இக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, துறையின் கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து ஆய்வு செய்து, திருப்பணி சார்ந்த நிறை, குறை மற்றும் தேவைகளை கேட்டறிந்தனர்.
இக்கோவில், 100 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்ததாக இருப்பதால், கும்பாபிேஷகம் நடத்த, ஐகோர்ட் நியமித்த மாநில அளவிலான திருப்பணி வல்லுநர் குழுவின் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அக்குழு, கோவில் கும்பாபிேஷகம் நடத்த அனுமதிபழமை வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த, 'திருப்பணி வல்லுநர் குழு' அனுமதியளித்துள்ளதை தொடர்ந்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானதாக, அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்ட கோவிலாகவும் விளங்குகிறது.
சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த, 1980ல், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதன் பிறகு, 1991 மற்றும், 2008ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. பொதுவாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகி விட்டது.
எனவே, விரைவில் கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்தாண்டு, இக்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, துறையின் கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து ஆய்வு செய்து, திருப்பணி சார்ந்த நிறை, குறை மற்றும் தேவைகளை கேட்டறிந்தனர்.
இக்கோவில், 100 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்ததாக இருப்பதால், கும்பாபிேஷகம் நடத்த, ஐகோர்ட் நியமித்த மாநில அளவிலான திருப்பணி வல்லுநர் குழுவின் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அக்குழு, கோவில் கும்பாபிேஷகம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu