அவிநாசி ஒன்றியங்களில் ஜெ., பிறந்த நாள் விழா

அவிநாசி ஒன்றியங்களில் ஜெ., பிறந்த நாள் விழா
X
ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்.
அவினாசி ஒன்றிய பகுதிகளில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அவிநாசி தெற்கு ஒன்றியம் சார்பில், வேலாயுதம்பாளையம் ஊராட்சி, பெரிய கருணைபாளையம் பிரிவில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம் தலைமை வகித்து, கொடியேற்றினார். ஒன்றிய பொருளாளர் காவேரி ரமேஷ், 150 பேருக்கு அன்னதானம் வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மணி, ஒன்றிய அவைத்தலைவர் சுப்ரமணியன், தம்பி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அவிநாசி மேற்கு ஒன்றியம் சார்பில், நம்பியாம்பாளையம் ஊராட்சி நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!