அவினாசி பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியது
அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., 7., காங்கிரஸ் 2 என, இக்கூட்டணி 9 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. அ.தி.மு.க., 6 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. 3 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளனர். இதில், சுயேச்சை வேட்பாளர்கள் கார்த்திகேயன், சரவணகுமார் ஆகியோர், தி.மு.க., கூட்டணியில் இருப்பதாகவும், இதனால், 11 உறுப்பினர்களின் பலம் இருப்பதாகவும், தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.
அ.தி.மு.க வின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, உட்கட்சி பூசலால் கட்சி சின்னம் பறிக்கப்பட்டு, 5வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்ற மோகன், மீண்டும் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். அவரை அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ, துணைத்தலைவர் வேட்பாளராக அ.தி.மு.க முன்னிறுத்தியதால், அ.தி.மு.க.வின் பலம், 7 ஆக அதிகரித்தது.
தலைவர் பதவிக்கு, தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளராக, 6வது வார்டில் வெற்றி தனலட்சுமி, 7வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் தி.மு.க. உறுப்பினர் கார்த்திகேயனின் மனைவி சசிகலாவும் மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., சார்பில், 14வது வார்டு உறுப்பினர் சித்ரா மனு தாக்கல் செய்தார். ஓட்டெடுப்பு முறையில், மூன்று வேட்பாளர்களும், தலா ஆறு ஓட்டு பெற்று, சரிசமநிலையை பிடித்தனர். பின், குலுக்கல் முறையில், தி.மு.க., வேட்பாளர் தனலட்சுமி, அ.தி.மு.க., வேட்பாளர் சித்ரா ஆகியோர் போட்டியிட தேர்வு செய்யப்பட்டனர். ஓட்டெடுப்பில், தனலட்சுமி, 10 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். சித்ரா, 8 ஓட்டு பெற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu