அவினாசி பேரூராட்சி தேர்தல் களம்: திமுக., கூட்டணியில் புகைச்சல்

அவினாசி பேரூராட்சி தேர்தல் களம்: திமுக., கூட்டணியில் புகைச்சல்
X

பைல் படம்.

அவினாசி பேரூராட்சியில், தி.மு.க., கூட்டணியில், வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையில், இழுபறி நீடிக்கிறது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க., கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ், மா.கம்யூ., இ.கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் கேட்ட வார்டுகளை வழங்க, தி.மு.க., முன்வராததால், இழுபறி நீடிக்கிறது. கட்சி நிர்வாகிகளிடம் கேட்ட போது, 'வார்டுகளை இறுதி செய்வதில் இருந்த சிக்கல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு