அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து
கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள 7 சிவாலயங்களில், திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் முதன்மை பெற்றதோடு, சுந்தரர் பதிகம் பாடிய திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில், கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கோவில் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது.
நடப்பாண்டு கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்பட்டதால், வருகிற 17-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்ட்டது. ஆனால், கொரோனா பரவல் வேகமெடுத்ததால், அரசு ஆணை 342-ன் படி கோவில்களில் திருவிழாக்கள், மதம் சம்மந்தப்பட்ட கூட்டங்களுக்கு தடைசெய்யப்பட்டது. இதன் காரணமாக நடப்பாண்டும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தேர்த்திருவிழா நிகழ்வு நடைபெறும் நாட்களில் சாமிக்கு நடைபெறும் பூஜைகள், அபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu