அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

அவினாசி லிங்கேஸ்வருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அடுத்த படம், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சிவபெருமான். 

அவினாசியில் உள்ள புகழ்பெற்ற, அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள பிரசித்தி பெற்ற, கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதுமானது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, அவினாசி, அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில், அதிகாலை, 3:00 மணி முதல் நடராஜ பெருமான மற்றும் சிவகாமி அம்மையாருக்கு விபூதி, பஞசகவ்யம், வெண்ணைய், அன்னம், நல்லெண்ணெய், சந்தனாதி தைலம், பச்சரிசிமாவு, பச்சை பயறு மாவு, நெல்லிப்பொடி, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வப்பொடி, பஞசாமிர்தம் உள்ளிட்ட, 32 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. நான்கு வேதங்களும் பாராயணம் செய்யப்பட்டன.

பஞ்சவாத்தியங்கள் முழங்க, ஓதுவார் மூர்த்திகள் தேவாரப் பாடல் பாட, தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு பல்வேறு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story