அவினாசி: இலவச மின் இணைப்பு திட்டம் இலக்கை தாண்டி சாதனை

அவினாசி: இலவச மின் இணைப்பு திட்டம் இலக்கை தாண்டி சாதனை
X

பைல்படம்.

அவினாசி மின்வாரியம் சார்பில், இலக்கை தாண்டி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவினாசி மின்வாரியம் சார்பில், இலக்கை தாண்டி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவிநாசி கோட்டத்தின் செயல்பாடு குறித்து, கோட்ட செயற் பொறியாளர் விஜய ஈஸ்வரன் கூறியதாவது;- மாநில அரசு, ஓராண்டில், ஒரு லட்சம் பேருக்கு, இலசவ மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்து, செயல்படுத்தியிருக்கிறது. இதில், அவிநாசி மின் கோட்டத்திற்கு, 998 மின் இணைப்புகள், இலக்காக வழங்கப்பட்டன. இதில், இலக்கை தாண்டி, 1,040 இணைப்புகள் வழங்கியுள்ளோம். 30.3.2022ற்குள் திட்டத்தை முடிக்க அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், 22ம் தேதியே இலக்கை தாண்டி பணியை முடித்தோம். இது, கோவை மண்டலத்தில் உள்ள, 60 மண்டல அலுவலகளை ஒப்பிடுகையில், ஒரு சாதனை தான். இவ்வாறு, அவர் கூறினார்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!