டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அருந்ததியர் எழுச்சி பேரவை சார்பில் போராட்டம்

மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அருந்ததியர் எழுச்சி பேரவை சார்பில், குன்னத்தூரில் இன்று போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர், கோபி சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாலும், முக்கிய சாலையின் முகப்பு பகுதியில் இருப்பதாலும் ஏராளமான வாகன விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் நலன்கருதி, இந்த மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, அருந்ததியர் எழுச்சி பேரவை சார்பில், குன்னத்தூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுபானக்கடைக்கு முன்பாக, பெண்கள் உள்ளிட்ட பலர் திரண்டு, கோஷம் எழுப்பினர்.

தகவல் அறிந்த குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் முதல்நிலைக் காவலர்கள் வந்து, மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து, சம்பந்தப்பட்ட துறை நிர்வாகிகளிடம் பேசி, விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!