அவினாசி கோவில்களில் ஆருத்ரா மஹா தரிசன விழா
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் எழில்மிகு தோற்றம்.
அவினாசி கோவில்களில் ஆருத்ரா மஹா தரிசன விழா நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே சேவூரில் அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வர சுவாமி கோவிலில், வரும், 19ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 20ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. அதன்பின், அம்மையப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பிரகார உலா நடக்கிறது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா மஹா தரிசன விழா வரும் 20ம் தேதி நடக்கிறது. முன்னதாக, 19ம் தேதி இரவு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 4:00 மணி முதல் ஆடல் வல்லானுக்கும், சிவகாமி அம்மைக்கும், 32 திரவியங்களால் மகா அபிேஷகம் நடக்கிறது. அதன்பின், 12 வகையான மலர்களால், சிறப்பு அலங்காரம், அவிநாசி தேவாரம் மற்றும் வேத பாராயணங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu