நீர்நிலை ஆக்கிரமிப்பு? கணக்கெடுக்கும் அதிகாரிகள்

நீர்நிலை ஆக்கிரமிப்பு? கணக்கெடுக்கும் அதிகாரிகள்
X

பைல் படம்.

அவினாசி ஊராட்சி பகுதிகளில், நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள, 31 கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விவரம் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களிடம், தங்கள் எல்லைக்குட்பட்ட இடங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த விவரம் சேகரித்தனர். 'இந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!