அவினாசியில் நாளை (10ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

அவினாசியில் மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின்பராமரிப்பு காரணமாக அவினாசியில் நாளை 10ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கானுார் புதுார் துணை மின்நிலையம் பகுதிகளில் காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி மின் விநியோகம் இருக்காது.

அதேபோல் பசூர் துணை மின் நிலைய பகுதிகளில் காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஓட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதுார், அம்மாசெட்டி புதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!