கணியாம்பூண்டி: முருகம்பாளையம் ஆதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

கணியாம்பூண்டி: முருகம்பாளையம்  ஆதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
X

முருகம்பாளையம் அருள்மிகு அழகர் அப்பிச்சிபாறை ஆதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

அவிநாசி தாலுகா, கணியாம்பூண்டி அருகே முருகம்பாளையத்தில் உள்ள, அழகர் அப்பிச்சிபாறை ஆதீஸ்வரர் கோவிலில், இன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று, அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி, அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். இந்த வருடத்திற்கான ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று சிவாலயங்களில், அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.


அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் அருகே முருகம்பாளையம் அழகர் அப்பிச்சிபாறை ஆதீஸ்வரர் கோவிலில், இன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இதில் கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதி பக்தர்கள், கொரோனா வழிகாட்டுதல்களுடன் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!