அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அன்னுாரில் ஊராட்சிகள் தேர்வு

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அன்னுாரில் ஊராட்சிகள் தேர்வு
X
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துகிறது. கடந்த நிதியாண்டில், அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு, அன்னுார் ஒன்றியத்தில் பொகலுார், ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி, வடவள்ளி, அ.மேட்டுப்பாளையம் என, ஐந்து ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.

நடப்பு நிதியாண்டில் அல்லப்பாளையம், ஒட்டர்பாளையம், பச்சாபாளையம், பிள்ளையப்பம்பாளையம் என, நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா 30 லட்சம் வீதம், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ஒதுக்கப்படும் நிதியில் குடிநீர் பணிக்கு 30 சதவீதம், தெருவிளக்கு, சாலைக்கு 20 சதவீதம், மயானம், கிராம மேம்பாடு, சுய உதவி குழு திறன் மேம்பாட்டுக்கு தலா 10 சதவீதம், பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்புக்கு 15 சதவீதம் என பிரித்து பணிகள் செய்ய வேண்டும். இதற்காக, விரைவில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் என்றனர்.

Tags

Next Story
crop opportunities ai agriculture