அவினாசியில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க ஐந்தாவது மாநாடு
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் அவினாசி ஒன்றிய ஐந்தாவது மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் அவினாசி ஒன்றிய ஐந்தாவது மாநாடு , அமைப்பின் ஒன்றியத் தலைவர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. சுகன்யா, வரவேற்றார். ஒன்றிய இணை செயலாளர் சரஸ்வதி, மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் தனலட்சுமி, வட்டார செயலாளர் இந்திராணி, மல்லிகா, சி.ஐ.டி.யு மாவட்ட நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வழங்கக்கூடாது. அங்கன்வாடி பணியாளர்களை, அரசு ஊழியர்களாக்க வேண்டும். ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு பணி கொடையாக, 10 லட்சம் ரூபாய், உதவியாளருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியம், 21 ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப, உணவு மானியம் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களால் செலவு செய்யப்பட்ட சமையல் காஸ் சிலிண்டருக்குரிய முழு தொகையையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக வளர்மதி, செயலாளராக இந்திராணி, பொருளாளராக மல்லிகா தேர்வு செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu