அவினாசியில் 'அன்பால் அரவணைப்போம்' அறக்கட்டளை 2வது ஆண்டு துவக்கவிழா

அவினாசியில் அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளை 2வது ஆண்டு துவக்கவிழா
X

அவினாசியில், அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் 2வது ஆண்டு துவக்க விழா, நேற்று மாலை  நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள். 

அவினாசியில், அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் 2வது ஆண்டு துவக்க விழா, மற்றும் அவினாசி இணைந்த கைகள் அமைப்பின் பாராட்டு விழா நடைபெற்றது.

அவினாசி ஆட்டையாம்பாளையம், செந்தூர் மஹால் திருமணம் மண்டபத்தில் நேற்று மாலை இவ்விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை, ஆயிஷா வரவேற்றார். விழாவில், திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியின் நிறுவனர் மோகன் கார்த்திக், திருப்பூர் சுந்தரபாண்டியன், நட்ராஜ், காவல்துறை ப.வரதராஜன், விஷ்ணு, மாரிமுத்து. இராயப்பன், மாரப்பன், டாக்டர் பிரகாஷ், சந்தீப், டாக்டர் குகப்ரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கும், தொற்று பாதித்த மக்களுக்கும் கோவிட் இணைந்த கைகள் அமைப்பினர் மேற்கொண்ட பணிகள், வீடியோவாக காண்பிக்கப்பட்டது. அத்துடன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளின் சேவையைப் பாராட்டி, விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் கலந்து கொண்டவர்கள்.
மேலும், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின்போது சிறப்பாக பணிபுரிந்து, அவசர காலத்தில் உதவி புரிந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் வரவழைக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழா நிறைவில், சிவா நன்றி தெரிவித்தார். இதில், ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
அவினாசி தொகுதி செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள, https://www.watsapp.news/AN என்ற வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்.

Tags

Next Story
ai in future agriculture