இயற்கை விவசாயமே வரம் - வேளாண் தேசிய கருத்தரங்கில் நம்பிக்கை

இயற்கை விவசாயமே வரம் - வேளாண் தேசிய கருத்தரங்கில் நம்பிக்கை
X

கோப்பு படம்

இயற்கை விவசாயத்தால் அதிக பயன் கிடைக்கும் என, வேளாண் தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

இயற்கை வேளாண்மை குறித்த தேசிய கருத்தரங்கு காணொளி வாயிலாக குஜராத் மாநிலத்தில் நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசுவதை நேரடியாக விவசாயிகள் கேட்பதற்கு, அவிநாசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட அன்னுார் வேளாண் விரிவாக்க மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மோடியின் உரையை வேளாண் அதிகாரிகள் தமிழில் மொழிபெயர்த்து விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

அப்போது, பேசிய பிரதமர் மோடி, ''இயற்கை விவசாயம் செய்வதன் வாயிலாக சிறு விவசாயிகள் அதிக பயன் பெறுவர். ரசாயன உரத்தை விட இயற்கை உரங்களை பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும். இயற்கை வேளாண்மையின் வாயிலாக வருமானம் பெருகும்'' என்றார்.

அவரது உரையின் முடிவில் விரிவாக்க மைய வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "இயற்கை விவசாயத்திற்கு பல மானியங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும்," என்றார். பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் கணேஷ் பாண்டியன், வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!