அவினாசி அருகே ஆடு மேய்க்க சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

அவினாசி அருகே ஆடு மேய்க்க சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு
X

குட்டையில் மூழ்கிய சிறுவனை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

அவினாசி அருகே ஆடு மேய்க்க சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள வெள்ளியம்பாளைம், கரைப்பாளையம் கிராமம் சிந்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டட தொழிலாளி. அவரது மனைவி செல்வி. பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார். இவர்களது மகன், மதன்குமார், 11, வயது. 5ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று, மாலை தனது நண்பர்களுடன் ஆடு மேய்க்க சென்று திரும்பி வரும்போது, அங்குள்ள தனியாருக்கு சொந்தமான குட்டைக்குள் இறங்கி சிறுவர்களுடன் விளையாடியுள்ளான். ஆழுமான பகுதிக்கு சென்ற மதன்குமார் எதிர்பாராவிதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினான்.

அவினாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடம் விரைந்து குட்டையில் இறங்கி சிறுவனை சடலமாக மீட்டனர். சிறுவனின் உடல் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!