700 கிலோ குட்கா பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை

700 கிலோ குட்கா பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
X

அவினாசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா.

அவினாசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 700 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டு நடத்தினர். அவினாசி அருகே தெக்கலுாரில் பேன்சிகடை வைத்திருக்கும் சம்புசிங், 33 என்பவரின் வீட்டில் ரெய்டு நடத்திய போது, அங்கு, 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் தனது வீட்டில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து, சில்லறை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். நேற்று, அவினாசி அருகே திருமுருகன்பூண்டி போலீசார் சார்பில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்புசிங்கின் சகோதரர், சன்வந்த்சிங் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!