திருமுருகன் பூண்டி நகராட்சியில் 69 சதவீதம் வாக்குப்பதிவு

திருமுருகன் பூண்டி நகராட்சியில் 69 சதவீதம் வாக்குப்பதிவு
X
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில், 28,108 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், ஆண்கள், 13,984 பேர்; பெண்கள், 14,123 பேர். ஒரு திருநங்கை.

35 வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம், 19,441 பேர் வாக்களித்தனர். இதில், ஆண்கள், 9,715 பேர், பெண்கள், 9,726 பேர்; இது, 69.17 சதவீதம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!