பெண் உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பெண் உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

கஞ்சா வழக்கு; நான்கு பேர், குண்டர் சட்டத்தில் கைது.

Goondas Act in Tamil -கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட நான்கு பேர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

Goondas Act in Tamil -திருப்பூரை அடுத்த அவிநாசி பஸ் ஸ்டாண்ட் அருகில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சென்ற போலீசார், அங்கு நின்ற 2 பேரை பிடித்து விசாரித்து, அவர்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களை விசாரித்த நிலையில், மேலும் ஒரு பெண்ணிடம் இருந்து 15 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கஞ்சாவுடன் பிடிபட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சாந்தி (வயது 54), அவரது தம்பி முருகேசன் (44), கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வாகராயன்பாளையத்தை சேர்ந்த சரண் (22), சுரேஷ் (32) ஆகிய 4 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருப்பூர் எஸ்.பி சசாங் சாய், இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து, சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் வினீத் உத்தரவுப்படி சாந்தி, முருகேசன், சரண், சுரேஷ் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு, கோவை சிறையில் உள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!