தொடர் மழையால் அவினாசியில் 2,000 வாழை மரங்கள் சேதம்

தொடர் மழையால் அவினாசியில் 2,000 வாழை மரங்கள் சேதம்
X

அவினாசி வேலம்பாளையத்தில் மழைக்கு வீழ்ந்த வாழை மரங்கள்.

அவினாசியில், தொடரும் மழையால் இதுவரை, 2,000 வாழை மரங்கள் தேசமாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், அவினாசி வட்டாரத்தில், மாவட்ட அளவில் அதிகபட்ச மழை பொழிகிறது. கடந்த, 24ம் தேதி, 76 மி.மீட்டர், 25ம் தேதி, 79 மி.மீ., நேற்று முன்தினம், 64 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையால், ஆங்காங்கே உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

தொடர் மழை காரணமாக அவினாசி வட்டத்துக்கு உட்பட்ட கருவலுார், சின்னேரிபாளையம், வளையபாளையம் உள்ளிட்ட இடங்களில் இதுவரை 2,000 வாழை மரங்கள், காற்றுக்கு சாய்ந்துள்ளன. இதுகுறித்த விரிவான அறிக்கை, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு