ஒரே நாளில் 100 பேருக்கு தொற்று - அன்னுாரில் தெருக்களுக்கு 'சீல்'
அல்லிக்காரம்பாளையத்தில், ஒரே தெருவில் 4 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அந்த தெருவுக்கு 'சீல்' வைக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது.
அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் ஐந்து போலீசாருக்கு தொற்று உறுதியானது. ஒட்டர்பாளையம், கஞ்சப்பள்ளி, காட்டம்பட்டி, குன்னத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் 43 பேருக்கு தொற்று உறுதியானது. அல்லிக்காரம்பாளையத்தில், ஒரே தெருவில் 4 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அந்த தெருவுக்கு 'சீல்' வைக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், நேற்று ஒரே நாளில், 52 பேருக்கு தொற்று உறுதியானது.
கோவில்பாளையம் பேரூராட்சியில், 16 பேருக்கு; கொண்டையம்பாளையம் ஊராட்சியில் 14 பேருக்கு; இடிகரை பேரூராட்சியில், ஒன்பது பேருக்கு, கீரணத்தம் ஊராட்சியில் ஐந்து பேருக்கு, கள்ளிப்பாளையம் ஊராட்சியில் நான்கு பேருக்கு என, 52 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதில், கொண்டையம்பாளையம் மற்றும் இடிகரை பேரூராட்சியில், ராமானுஜா நகர் என, இரண்டு பகுதிகள் 'சீல்' வைக்கப்பட்டு, மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களை ஒப்பிடுகையில், நேற்று ஒரே நாளில், 100 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த பகுதியில், உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu