100 நாள் தொழிலாளர்களுக்கு நாளை கிராம சபை கூட்டம்

100 நாள் தொழிலாளர்களுக்கு நாளை கிராம சபை கூட்டம்
X

பைல் படம்.

அன்னுார் ஒன்றியத்தில், நான்கு ஊராட்சிகளில், நாளை, 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கான கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அன்னுார் ஒன்றியத்தில், நான்கு நாட்களாக, வடவள்ளி, ஒட்டர் பாளையம், வடக்கலுார், குன்னத்துார் ஊராட்சிகளில், 2019–20ம் நிதியாண்டில், 100 நாள் வேலை திட்டத்தில் செய்த பணிகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பண்ணைக்குட்டை, வரப்பு அமைத்தல், சிறு பாலம் அமைத்ததில் அளவீடு சரியாக உள்ளதா, நடப்பட்ட மரக்கன்றுகள் உள்ளனவா, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதா என சிறப்பு அலுவலர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.

இக்குழுவின் தணிக்கை அறிக்கை, நாளை (24ம் தேதி), சம்பந்தப்பட்ட நான்கு ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் பங்கேற்று, தெரிந்து கொள்ளலாம். தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!