ஆட்டோ டிரைவர் கொலை; மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

ஆட்டோ டிரைவர் கொலை; மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை
X

திருப்பூரில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த மூன்று பேருக்கு, ஆயுள் தண்டனை வழங்கி, கோர்ட் தீர்ப்பளித்தது.

News Murders Today -திருப்பூரில் ஆட்டோ டிரைவரை கொலை செய்து, வீட்டுக்குள் புதைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது.

News Murders Today -திருப்பூர், அனுப்பர்பாளையம் தண்ணீர்பந்தல் காலனியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலா (26). இவர், கடந்த 8-4-2014 அன்று அதிகாலை 2 மணிக்கு தனது நண்பர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பின், வீடு திரும்பவில்லை. இது குறித்து பாலாவின் சகோதரர் 15வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பாலா அடித்துக் கொலை செய்து, புதைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

அனுப்பர்பாளையம் புதூரில் கட்டிட தொழிலாளியான ராக்கப்பன் (49), மகன் அருண்பாண்டியன் (27) மற்றும் ராக்கப்பனின் 2-வது மனைவி விஜயலட்சுமி (34) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். விஜயலட்சுமிக்கு, ஆட்டோ டிரைவர் பாலா பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, பாலாவை அழைத்து கண்டித்தனர். ஆனாலும் தொடர்ந்து அவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தததால், செல்போனில் அவரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் ராக்கப்பன், விஜயலட்சுமி, அருண்பாண்டியன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பாலாவை அடித்து கொலை செய்து, பிணத்தை வீட்டுக்குள் புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது.

தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பாலாவின் உடலை தோண்டி எடுத்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கை அனுப்பர்பாளையம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கொலை குற்றத்துக்காக ராக்கப்பன், அருண்பாண்டியன், விஜயலட்சுமி ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம், கொலையை மறைத்த குற்றத்துக்காக மூன்று பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!