திருப்பூரில் இருந்து சென்னைக்கு விளையாட்டு வீரர்கள் பஸ்சில் பயணம்

திருப்பூரில் இருந்து சென்னைக்கு விளையாட்டு வீரர்கள் பஸ்சில் பயணம்
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பஸ்சை  கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர்.

Tirupur News,Tirupur News Today- சென்னையில் நாளை துவங்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, திருப்பூரில் இருந்து பஸ்சில் விளையாட்டு வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

Tirupur News,Tirupur News Today- முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 66 விளையாட்டு வீரர் வீராங்கனைகள், 8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து, வழியனுப்பி வைத்தார்.

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நாளை (1-ம் தேதி) முதல் 25-ம் தேதி வரை 5 பிரிவுகளில் சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டு வீரர்களுக்கான சிலம்பம், கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது.

அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் 8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், நாளை துவங்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவில் வெற்றி பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.

பின்னர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து செல்லும் பஸ்சை கொடியசைத்து வழிஅனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!