அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: 2ம் கட்ட ஆய்வு பணிகள் தீவிரம்
அத்திக்கடவு அவிநாடி திட்ட மாதிரி வரைபடம்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் நிறைவு பெற்று வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பெருந்துறையில் துவங்கி கோவை மாவட்டம் காரமடை வரை பல்வேறு இடங்களை உள்ளடக்கி 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில் பணி நடந்து வருகிறது. பவானி ஆற்றில் இருந்து வெளியே காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரிநீர் தான் இத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
நீலகிரி, மாயாறு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்தே உபரி நீர் வெளியேற்றம் அமையும். பருவமழை கைகொடுத்தால் ஆகஸ்டு 15க்கு பிறகு அத்தகைய சூழல் ஏற்படும். அதன்பின் திட்டம் பயன்பாட்டுக்கு வரும். இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் பொதுப்பணித்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர், கள ஆய்வு நடத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர். தற்போது நிறைவேற்றப்பட உள்ள திட்டத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu