தாராபுரத்தில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Tirupur News,Tirupur News Today- தாராபுரத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணி.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக உடுமலை அரசு கலைக்கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உடுமலை போலீஸ் டிஎஸ்பி சுகுமாரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் கல்யாணி முன்னிலை வகித்தார். இதையடுத்து டிஎஸ்பி சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன்(தளி), போதை ஒழிப்பு விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கூறினர்.
அதைத் தொடர்ந்து காணொளி வாயிலாக, சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.பின்னர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் என்.சி.சி, கல்லூரி மாணவர்கள், போலீசார் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர். பேரணி கல்லூரியில் இருந்து உடுமலை திருமூர்த்திமலை சாலையை சென்றடைந்து மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது. அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ்(சட்டம்ஒழுங்கு), சந்திரமௌலி(மதுவிலக்கு)உள்ளிட்ட போலீசார், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் ராசேந்திரன்,கார்த்திகா உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று உடுமலை உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், கொமரலிங்கம், தளி, அமராவதிநகர், கணியூர் உள்ளிட்ட காவல் சரக பகுதியில் 20 இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு சம்பந்தமான ஒளிபரப்பு நிகழ்ச்சி, விழிப்புணர்வு நாடகம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 32 இடங்களில் நடைபெற்றது.
இந்தப் பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் போலீசார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துக்கூறியதுடன் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினா். அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
சாமளாபுரம்;
மங்கலம், சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணிக்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வனிதா, வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில் சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவ,மாணவிகள் சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.
இந்த பேரணியானது சாமளாபுரம் - லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் பள்ளி வளாகத்தில் பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப்பொருளின் தீமைகள் குறித்து மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேசினார். இறுதியாக மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, மைதிலிபிரபு, லிட்ரசி பள்ளியின் ஆசிரியர்கள், ஏ.வி.ஏ.டி.பள்ளியின் ஆசிரியர்கள், மங்கலம் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu