அமராவதி நகா் சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வௌியீடு
Tirupur News- உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளி (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகா் சைனிக் பள்ளியில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி முதல்வா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
இந்தியா முழுவதும் உள்ள சைனிக் பள்ளிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தோ்வு 2024 ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைனில் நவம்பா் 7-ம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பா் 16 ஆகும். வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் மேலும் முழுமையான விவரங்களை என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்புக் கல்வி நிறுவனத்தில் (National Defence Academy) சேர்க்கை பெறுவதற்கான கல்வி, உடல்நிலை மற்றும் மனநிலை போன்றவைகளை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி நகரில் அமைந்திருக்கும் சைனிக் பள்ளி உட்பட இந்தியா முழுவதும் 33 இடங்களில் சைனிக் பள்ளிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu