திருப்பூர்; உயர்விளைச்சல் தரும் நிலக்கடலை விதை பருப்புகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
Tirupur News-விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் நல்ல ரக நிலக்கடலை விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News -தமிழ்நாடு அரசு விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர். பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருப்பூர் மாவட்டம் முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் மற்றும் நத்தக்காடையூர், முள்ளிப்புரம், பழையகோட்டை, குட்டப்பாளையம், பரஞ்சேர்வழி, மருதுறை ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து கால்வாய் வழியாக ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக திறந்துவிடப்படும் தண்ணீரை பயன்படுத்தி எண்ணெய் வித்து பயிர், நஞ்சை சம்பா நெல் மற்றும் காய்கறிகள், கீரை வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பகுதி விவசாயிகள் எதிர்வரும் கார்த்திகை மாத இறுதி பட்ட பருவத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ள தற்போது தயாராகி வருகிறார்கள். இதன்படி இப்பகுதி விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி செய்யும் காலங்களில் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் பெறுவதற்கு நிலக்கடலை விதை பருப்புகள் பங்கு முக்கியமானது ஆகும்.
எனவே இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி தொடங்கும் காலத்தில் நல்ல தரமான நிலக்கடலை விதை பருப்புகள் சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதை சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறது
இதன்படி இப்பகுதி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் தரக்கூடிய நல்ல ரக நிலக்கடலை விதை பருப்புகளை விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் இப்பகுதி விவசாயிகள் எதிர்வரும் கார்த்திகை மாத பட்டத்தில் தங்கள் வாங்கி விதைக்கும் நிலக்கடலை விதை பருப்புகள் தரமற்றதாகவும், முளைப்புத்திறன் குறைபாடு கொண்டதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்கக சான்று இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் புகார் மனு அனுப்பி தீர்வு கண்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu