திருப்பூர்; அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில் நுட்ப மையங்களாக்குதல் குறித்து ஆலோசனை
Tirupur News- உடுமலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்துறை இன்டஸ்ட்ரி 4.0 தேவைகேற்ப தொழில் நுட்ப மையங்களாக்குதல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் கூறியதாவது,
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தமிழக அரசு டாடா நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் கணினி மயமாக்கப்பட்ட மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் கட்டமைப்புக்காக நவீன தொழில்நுட்ப வசதிகளும் எலக்ட்ரானிக் ரோபோ எந்திரங்களும் கொண்ட தொழில்நுட்ப மையங்கள் திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய 3 அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன.
டாட்டா டெக்னாலஜிஸ் நிறுவன தலைமையின் 20 சர்வதேச நிறுவனங்கள் இத்தொழில் மையங்கள் உருவாக்கிட இணைந்துள்ளன . இத்தொழில் மையங்களில் நீண்ட கால பயிற்சியாக மேனுபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன் - ஒரு வருடம், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபாக்சரிங் டெக்னீசியன் - ஒரு வருடம், அட்வான்ஸ் சிஎன்சி .,மெஷினிங் டெக்னீசியன் - 2 வருடம், பேசிக் டிசைனர் அண்ட் விருச்சுவல் வெரிபையர் (எந்திரவியல்)- 2வருடம், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் - 2 வருடம் ஆகிய 5- பிரிவுகளில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும் இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், சி.என்.சி கம்ப்யூட்டர் நியூமரிக் கண்ட்ரோல் மற்றும் மெஷின் சென்டர், இன்டர்நெட் ஆப் திங்ஸ், மேனு பாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், ப்ராடக்ட் டிசைன் அண்ட் டெவலப்மென்ட் அண்ட் ப்ராடக்ட் வெரிபிகேஷன் அனாலிஷிஸ், எலக்ட்ரிக் வெகிகிள், அட்வான்ஸ் பெயிண்டிங், அட்வான்ஸ் பிளம்பிங், ஆடிட்டிவ் மேனு பாக்சரிங் என 9 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கே நிறுவப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களின் வாயிலாக 23 பிரிவுகளில் குறுகியகால பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. குறுகிய கால பயிற்சியில் ஐடிஐ., டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்து தங்களது திறன்களை மேம்படுத்த விரும்புபவர் பயிற்சிகளை இலவசமாக பெற்று தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ள வாய்ப்பாக இருக்கும்.இதுபோன்றே சிறு மற்றும் குறுந்தொழில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தவும் மற்றும் தொழிற்சாலைகளில் புதிதாக பணியில் சேரும் நபர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திட இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம் ராமலிங்கம், தொழில்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu