9 கல்லூரிகளில், 21 பாடப்பிரிவுகள் நீக்கம்; பாரதியார் பல்கலை., சிண்டிகேட் அனுமதி
Tirupur News,Tirupur News Today- திருப்பூர்,கோவை உள்ளிட்ட பகுதிகளில், 9 கல்லூரிகளில், 21 பாடப்பிரிவுகள் நீக்கம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் கல்லூரிகளில் 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கோருவதை போன்று சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்தவும் அனுமதி கோருவது வழக்கம். அதன்படி 9 கல்லூரிகளில் இருந்து சில பாடப்பிரிவுகளை நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகள் மேற்கொண்டு 21 பாடப்பிரிவுகளை நிறுத்த பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரிகளில், 9 கல்லூரிகளில் இருந்து 21 பாடப்பிரிவுகள் நிறுத்த அனுமதி கோரியிருந்தனர்.கணிதம், பி.காம்., ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், வரலாறு, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்று இருந்தன. மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது படிக்கும் மாணவர்கள் முடிக்கும் வரை எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu