மாவட்டம் முழுவதும் 8,500 கண்காணிப்பு கேமராக்கள்; குற்றங்களை தடுப்பதில், திருப்பூர் போலீசார் உஷார்

மாவட்டம் முழுவதும் 8,500 கண்காணிப்பு கேமராக்கள்; குற்றங்களை தடுப்பதில், திருப்பூர் போலீசார் உஷார்
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், 8,500 சிசிடிவி கேமராக்களில் போலீசார் கண்காணிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8,500 கேமராக்கள் பொருத்தி குற்றச் சம்பவங்கள் குறித்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் காங்கயம், பழையகோட்டை ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் சார்பில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

இதில் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது,

பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி தீர்வு பெற்றுத் தரப்படும். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தின் போது அதில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, ஓடிபி கேட்டு மோசடியில் சிலர் ஈடுபடுகின்றனர். ஆனால் எந்த வங்கியும், இவ்வாறு ஓடிபி எண்ணைக் கேட்பதில்லை. அது போன்ற கும்பல்களை பிடிப்பதில் சிரமம் உள்ளது.

எனவே, பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகம், செயலிகள் பதிவிறக்கம் ஆகியவற்றின் போது பணம் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும், 8,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம், என்றார்.

இக்கூட்டத்தில் காங்கயம் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

வர்த்தகர்கள் கவனத்துக்கு

போலீசார் தரப்பில், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதை, அநாவசிய செலவாக கருதி, பலர் தங்களது வர்த்தக நிறுவனங்களில் பொருத்திக்கொள்வது இல்லை.

வீடுகளில் கூட, பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக் கொள்ளும் விழிப்புணர்வு பெருகி வருகிறது. சிறு பெட்டிக்கடைகள், பேக்கரி டீக்கடைகளில் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. எனவே, அனைத்து தரப்பினரும் தங்களது அரிசி ஆலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தொழில் நிறுவனங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது எனவும், போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!