திருப்பூர் மாவட்டத்தில் 80 கோவில்கள் திருப்பணிக்காக ரூ. 1.60 கோடி; அமைச்சர் சாமிநாதன் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் 80 கோவில்கள் திருப்பணிக்காக ரூ. 1.60 கோடி; அமைச்சர் சாமிநாதன் தகவல்
X

Tirupur News. Tirupur News Today- திருக்கோவில்களில், அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 62பேருக்கு அதற்கான உத்தரவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், 80 கோவில்களுக்கு திருப்பணிக்காக, ஒரு கோவிலுக்கு ரூ. 20 லட்சம் வீதம் ரூ. 1.60 கோடி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில், அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 62நபர்களுக்கு உறுப்பினர்களுக்கான உத்தரவை வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உத்தரவுகளை வழங்கி பேசியதாவது,

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தையும், ஒருகாலப்பூஜை திட்டத்தின் கீழ் திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம், திருக்கோவில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டம், திருக்கோவில் புனரமைக்கும் திட்டம் என எண்ணற்ற பல திட்டங்களை தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறத் திருக்கோவில் திருப்பணி நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருக்கோவில்களின் திருப்பணிக்கு ஆண்டுதோறும் அரசு நிதியுதவியாக ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், 20 திருக்கோவில்களின் திருப்பணிக்காக ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 20 கோவில்களுக்கு ரூ.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதி திருக்கோவில்களின் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில், 60 திருக்கோவில்களின் திருப்பணிக்காக ஒரு கோவிலுக்கு ரூ.2லட்சம் வீதம் மொத்தம் 60 கோவில்களுக்கு ரூ.1.20 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளது. இன்றைய தினம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்உள்ள திருக்கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக முதல்கட்டமாக நியமிக்கப்பட்ட 62 நபர்களுக்கு உறுப்பினர்களுக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் (இந்து சமய அறநி லையத்துறை)செந்தில்குமார், முத்துராமன், கலைச்செல்வி, ஜெகநாதன்சாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட அறங்காவலல் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!