திருப்பூர் மாவட்டத்தில், ரூ.4.71 கோடி மதிப்பீட்டில், 47 புதிய திட்டப்பணிகள் துவக்கம்
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், 47 புதிய திட்டப்பணிகளை, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நகர்ப்புற வேலைதிட்டம், நகர்புற சாலைகள் திட்டம் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
அதன்பின், அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது,
பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம், செல்லப்பிள்ளைபாளையத்தில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செல்லப்பிள்ளை பாளையம் முதல் கொடுவாய் - நாச்சிபாளையம் ரோடு வரை மற்றும் பொல்லிகாளிபாளையம் ரோடு முதல் வரக்குட்டைபாளையம் வரை தார்சாலை மேம்பாட்டுப்பணி, பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அனுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலணி முதல் வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் பழைய அனுப்பட்டி இரண்டாவது வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.3.06 லட்சம் மதிப்பீட்டில் இந்திரா காலணி இரண்டாவது வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.
அதே போல், கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் செங்கோடம்பாளையம் மதுரைவீரன்கோவில் வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.4.31 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணாபுரம் பள்ளி வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி , ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் காமநாயக்கன்பாளையம் ஆசிரியர் காலணி மூன்றாம்வீதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள்.
கரடிவாவி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கரடிவாவி கதர்கடை முதல் வீதியில் கான்கிரீட் தளம்அமைக்கும் பணி , சாமளாபுரம் பேரூராட்சியில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற வேலைத்திட்டத்தின் கீழ் வார்டு எண் 1 -ல் சாமளாபுரம் தோட்டத்து சாலை வீதியில் தார் சாலை அமைக்கும் பணி , ரூ.45.24 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புறசாலைகள் திட்டத்தின் கீழ் வார்டு எண் 6 மற்றும் 7-ல் மலைக்கோவில் முதல்பெருமாம்பாளையம் வரை மற்றும் மலைக்கோவில் சுற்றி தார் சாலை அமைக்கும்பணி என மொத்தம் ரூ.4.71 கோடி மதிப்பீட்டில் 47 புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன, என்றார்.
அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறையின் சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 27பயனாளிகளுக்கு ரூ.80,890 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும்,தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு வெங்காய விதைகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார் (பொங்கலூர்), மனோகரன் (பல்லடம்), உதவிப்பொறியாளர்கள் செந்தில்குமார், குருபிரசாத், மகாலட்சுமி, கார்த்திக்குமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியன், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu