பல்லடத்தில் 4 பேர் வெட்டிக்கொலை ; கோர்ட்டில் 800 பக்கங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல்
Tirupur News- பல்லடத்தில் 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 800 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே மாதப்பூர் கள்ளக்கிணறு குரைத்தோட்டம் பகுதியில் வீட்டு முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்ட தகராறில் அப்பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், அவரின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோரை, ஒரு கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல்லடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி, கோவை டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் மேற்பார்வையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (வயது 24), திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (52), வெங்கடேஷ் (27), தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா, திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் அதிவேகமாக புலன் விசாரணை முடித்து சாட்சிகள் விசாரணை முடிந்து சாட்சியங்களுடன் பல்லடம் போலீஸ் டிஎஸ்பி சவுமியா முன்னிலையில், பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீதும், 800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu