/* */

திருப்பூரில் தயாரான 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள்: மாவட்டம் வாரியாக விநியோகம்

Tirupur News- திருப்பூரில் தயாரான 4 லட்சம் டீ-சர்ட் பனியன்களை, மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

திருப்பூரில் தயாரான 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள்: மாவட்டம் வாரியாக விநியோகம்
X

Tirupur News- திருப்பூரில் 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள் தயார் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் பனியன் உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் விளையாட்டு போட்டிகள், கோவில் திருவிழாக்கள், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அணியும் வகையில் ஆர்டரின் பேரில் டீ-சர்ட் பனியன்கள் தயாரித்து கொடுக்கப்படுகிறது.

இந்தநிலையில் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ள தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாட்டிற்காக திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 4 லட்சம் டீ-சர்ட் பனியன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது,

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வருகிற 24-ம் தேதி தி.மு.க. 2-வது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கும் இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவதற்காக தி.மு.க., சார்பில் 4 லட்சம் பனியன்கள் தயாரிக்க திருப்பூரில் உள்ள 4 பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டது. முதலில் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெற இருந்த நிலையில், சென்னை மிச்சாங் மழை வெள்ள பாதிப்பு காரணமாக 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் ஆர்டர் கொடுத்ததுமே 4 நிறுவனங்களிலும் பனியன் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

முதலில் மாநாடு 17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கு 2 நாள் முன்னதாகவே பனியன்கள் தயாரித்து கொடுத்து விட வேண்டும் என்று தயாரிப்பு பணியில் ஈடுபட்டோம். தற்போது 4 லட்சம் பனியன்களும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

தி.மு.க. இளைஞரணி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியனில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளது. பனியனின் இடது, வலதுபுற கைகளில் கலைஞர் நூற்றாண்டு விழா லோகோ அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு-2023, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மிகவும் தரமாகவும், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்களை கவரும் வகையில் பனியன்களை தயாரித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள டீ-சர்ட் பனியன்கள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு நடைபெறும் 24-ம் தேதி அன்று அந்தந்த மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள், தொண்டர்கள் டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்ள உள்ளனர். திருப்பூரில் உள்நாட்டு தயாரிப்புகள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கோடிக்கணக்கான மதிப்பில் டீ சர்ட் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்நிய செலாவணியில் அதிக வருமானம் ஈட்டித் தரும் நகரம் என்பதால்தான் திருப்பூருக்கு டாலர் சிட்டி என்ற சிறப்பு பெயரும் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் பார்லிமென்ட் தேர்தல் வர உள்ளது. அதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டில் தமிழகத்துக்கு சட்டசபை தேர்தலும் வர உள்ளது. தேர்தல் பிரசார காலகட்டங்களில் தேர்தல் சின்னங்கள், கட்சி தலைவர்கள் படங்கள் பொறித்த டீ சர்ட் பனியன்களை அணிந்து கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். இதனால் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை பல்வேறு கட்சிகளும் திருப்பூரில்தான் தங்களது டீ சர்ட் ஆர்டர்களை தர உள்ளன. எனவே, அதற்கான ஆயத்த ஏற்பாடுகளில் பனியன் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Updated On: 15 Dec 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு