/* */

திருப்பூர் மாவட்டத்தில் 318 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கலெக்டர் தகவல்

Tirupur News-மாவட்டத்தில் 318 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று மாவட்ட தோ்தல் அலுவலர், கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் 318 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கலெக்டர் தகவல்
X

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் 318 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கலெக்டர் கூறினார்.

Tirupur News,Tirupur News Today- மாவட்டத்தில் 318 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்களவைத் தோ்தல் தொடா்பாக நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 11,50,110 ஆண் வாக்காளா்கள், 11,94,358 பெண் வாக்காளா்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 342 போ் என மொத்தம் 23,44,810 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு, அவிநாசி 1, திருப்பூா் வடக்கு 7, திருப்பூா் தெற்கு 6, பல்லடம் 5, உடுமலை 1 என மொத்தம் 20 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட 2,520 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நாளில் தோ்தல் பணிக்காக வாக்குச் சாவடி அலுவலா் உள்ளிட்ட 12,589 அரசுப் பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா். மாவட்டத்தில் உள்ள 2,520 வாக்குச் சாவடிகளில் 318 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் தாராபுரம் 25, காங்கயம் 37, அவிநாசி 25, திருப்பூா் வடக்கு 95, திருப்பூா் தெற்கு 75, பல்லடம் 40, உடுமலை 14, மடத்துக்குளம் 7 என மொத்தம் 318 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 24 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 16 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 64 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு:

தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் 1800-425-6989 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ யஐஎஐகஅடட மூலமாகவும் புகாா் அளிக்கலாம். வாக்காளா் பட்டியல், வாக்காளா் அடையாள அட்டை தொடா்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையை 1950 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். பொதுமக்கள் அளித்திடும் புகாா்கள் மற்றும் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பானபுகாா்களுக்கு, உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அனுப்பப்பட்டு 100 நிமிஷங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

Updated On: 20 March 2024 1:14 PM GMT

Related News