திருப்பூர் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருவள்ளுவா் தினம், வடலூா் ராமலிங்கா் நினைவு நாள், குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் ஜனவரி 16, 25, 26 -ம் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16, வடலூா் ராமலிங்கா் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 25, குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 -ஆகிய தேதிகளில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் செயல்படும் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாள்களில் மது விற்பனை செய்யும் நபா்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டரின் மற்றொரு அறிவிப்பு
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்கள் தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலமாக வழங்கப்படும் தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாட்கோ மூலமாக பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்ஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சாா்ந்தவா்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் துறை சாா்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்.டி.டி.எஃப்.நிறுவனத்தின் மூலமாக வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தை சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்ஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதங்கள் ஆகும். மேலும், தங்கிப் படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவா்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவா்கள் தொடக்க காலத்தில் ரூ.16 ஆயிரம் முதல் ரூ. 21 ஆயிரம் வரையில் மாத ஊதியம் பெறலாம். பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவா்களுக்கு ரூ.21 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் பெறலாம். இந்தப் பயிற்சியில் சேர இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை 0421-297112, 94450-29552 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu