திருப்பூரில் 229 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

திருப்பூரில் 229 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி
X

திருப்பூர் மாவட்ட பகுதிகளில், 229 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

Firecracker Shop Near Me -திருப்பூர் மாவட்டத்தில், 229 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

Firecracker Shop Near Me -தீபாவளிக்காக, பட்டாசு கடைகள் தற்காலிகமாக வைக்க திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகரில் பலர் விண்ணப்பித்தனர். மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 111 பேர் விண்ணப்பித்தனர். அவினாசி, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய இடங்களில் இருந்து 128 பேர் விண்ணப்பித்தனர். மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டு அனுமதி வழங்கினார். புறநகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி சசாங் சாய் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வினீத் அனுமதி வழங்கினார். கடை அமைய உள்ள இடம் பாதுகாப்பானதா என்றும், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட சான்றுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்கு பிறகு, திருப்பூர் மாநகர பகுதியில் 110 பேருக்கு தற்காலிக பட்டாசு கடை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதுபோல், புறநகர் பகுதியில் 119 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மாவட்டத்தில், மொத்தம் 229 கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பட்டாசு கடைகளில் பாதுகாப்பு முக்கியம்

போலீசார் அனுமதி பெற்ற பிறகே, பட்டாசு கடைகளை வைக்க வேண்டும். பட்டாசு கடைகள் முன்பு தீயணைக்கும் கருவியை கண்டிப்பாக வைக்க வேண்டும். 'இங்கே புகைப்பிடிக்க கூடாது' என விழிப்புணர்வு வாசகம் கடையின் முன்பு, கட்டாயம் வைக்க வேண்டும். எதிர்பாராத தீவிபத்து ஏற்பட நேர்ந்தால் அதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

பட்டாசு வெடிப்பதில் கவனமாக இருங்க...

பட்டாசுகள் பாதுகாப்பாய் வெடிப்பது முதல் அதனை வெடித்து முடித்து சுத்தம் செய்வது வரை அனைத்து நிலையிலும், மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். தீபாவளிக்கு பட்டாசுதான் ஒரு முழுமையை தரும். அதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவதில்லை. ஏதேனும் ஒர் வெடியோ, மத்தாப்போ, வீட்டின் முன் வைத்து வெடிப்பதன் மூலம் தீபாவளியின் முழுமையான மகிழ்ச்சி வெளிப்பாடு நிறைவேறுகிறது. மகிழ்ச்சியோடு வெடி வெடிப்பது என்பது, சில சமயம் தவறான மற்றும் எதிர்பாராத செயல்பாடுகளின் மூலம் விபத்துகளை ஏற்படுத்தி விட கூடும். எனவே மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடிப்பது என்பது கவனத்துடன் கையாள வேண்டும்.

பட்டாசு வெடிக்கும் போது செய்ய கூடாதவை

* நாம் அணிகிற ஆடை என்பது எளிதில் தீப்பற்றி விடாத வகையில் இருத்தல் வேண்டும். நைலான், பாலிஸ்டர் ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடித்தல் கூடாது. பருத்தி துணிகள் அணிவது பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும் போது வெளிவரும் தீப்பொறி பட்டாலும் நைலான் ஆடைகள் பொசுங்கி விட கூடும். அதுபோல், தரை வரை புரள விட்டு செல்லும் பகட்டான ஆடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது கூடாது. புதிய ஆடைகளை வெளியே மற்றும் விருந்தினர் வீட்டிற்கு செல்லும் போது அணிந்து சென்று பட்டாசு வெடிக்கும் போது, பருத்தியிலான கச்சித மான ஆடைகள் அணிதல் வேண்டும்.

* பட்டாசுகள் கொளுத்துவதற்கு தீக்குச்சி மற்றும் லைட்டர் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. நீளமான குச்சி ஊதுபத்தி, மத்தாப்பூ போன்றவை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். பட்டாசிற்கும் நமக்கும் சற்று இடைவெளி இருப்பது மிகவும் அவசியம்.

* வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க செய்கிறோம் என அதனை கையில் எடுத்து ஆராய்ச்சி செய்வதும் கூடாது. ஒருமுறை தீப்பொறி பட்ட பட்டாசு என்பது சில சமயம் சற்று தாமதமாக கூட வெடிக்க கூடும். எனவே வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுப்பது, மீண்டும் மீண்டும் அதன் மீது நெருப்பு வைப்பது போன்ற பணிகளை செய்தல் கூடாது. கையில் வைத்து வெடிப்பது, பொதுமக்கள் செல்லும் போது அவர்கள் மீது தூக்கி எறிந்து பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களை செய்தல் கூடாது.

* வீட்டின் உட்புறம் மற்றும் வாகன நிறுத்தம் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடித்தல் கூடாது. பட்டாசுகள் வைத்திருக்கும் இடத்தில் அருகில் விளக்குகள்,வெப்பமான மின் விளக்குகள் எரிய விடக்கூடாது. அது போல் பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு பிற பட்டாசுகளை வெடிக்க செய்யக் கூடாது. நெருக்கமான வீடுகள் உள்ள பகுதியில் பட்டாசு வெடிப்பது தவிர்த்திட வேண்டும்.

* ஓலை குடிசைகள் அருகில் ராக்கெட் போன்ற பாய்ந்து செல்லும் வெடிகளை வெடிப்பதை தவிர்த்திட வேண்டும். மத்தாப்பூ கம்பிகளை பற்ற வைத்து விட்டு ஆங்காங்கே தூக்கி எறிதல் கூடாது. பாதுகாப்பாக ஓர் பகுதியில் சேகரித்து பின்னர் அதனை வெளியேற்றிட வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!