ஆயுத பூஜைக்காக, திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆயுத பூஜைக்காக, திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள் இயக்கம்
X

Tirupur News - திருப்பூரில் இருந்து, ஆயுத பூஜைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் (கோப்பு படம்)

Tirupur News-ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, தொடர் விடுமுறை வருவதால் திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக, 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சிறப்பு பஸ்கள்

ஆயுதபூைஜ நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், கடைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு தொடர்விடுமுறை விடப்பட்டுள்ளால் திருப்பூரில் வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதில் திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகாசி, மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு 75 சிறப்பு பஸ்களும், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு 40 சிறப்பு பஸ்களும் செல்கிறது.

திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 30 பஸ்களும் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். கூடுதலாக எந்த கட்டணமும், பயணிகள் செலுத்த வேண்டியது இல்லை. பஸ்களில் பயணிக்கும் மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப இரவில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அரசு பஸ் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்லும் பலரும், ரயில்களில் செல்ல துவங்கி இருப்பதால் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags

Next Story