100 Crores Fraud Case- பல்லடத்தில் ரூ.100 கோடி மோசடி வழக்கு; எஸ்.பி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
100 Crores Fraud Case- ரூ. 100 கோடி மோசடி வழக்கை எஸ்.பி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு (கோப்பு படம்)
100 Crores Fraud Case, SP Investigation, High Court Orders- பல்லடத்தில் நடந்த ரூ.100 கோடி மோசடி வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரிக்க வேண்டும் என்று, சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் விஜயகுமாா் (46), சிவகுமாா் (43), வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் பிரவீணா (36). இவா்கள் மூவரும் கூட்டாக இணைந்து, சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாகக் கூறி திருப்பூா், கோவை, ஈரோடு, சேலம், கடலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பலரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்தனா்.
இது தொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸாா், பிரவீணா, சிவகுமாா் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த மோசடி வழக்கை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ரத்தினசாமி கூறியதாவது,
இந்த மோசடி வழக்கு தொடா்பாக சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டாா். கைது செய்யப்பட்ட சிவகுமாா், பிரவீணா இருவரும் நிபந்தனை ஜாமினில் விடப்பட்டதால் இருவரும் மாயமாகினா். ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் 10 மாதங்களாக ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என போலீஸாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினாா். மேலும் இந்த வழக்கை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணை அறிக்கையை 45 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டாா் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu