ஜிஎஸ்டி, பெட்ரோல் விலையால் பாதிப்பு, ராகுல்காந்தி

ஜிஎஸ்டி, பெட்ரோல் விலையால் பாதிப்பு, ராகுல்காந்தி
X

ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உள்ளிட்டவை தமிழக மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது என்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி கூறினார்.

ராகுல் காந்தி, இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது,டெல்லியில் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ் மக்களை மதிக்கவில்லை. தமிழ் கலாச்சாரத்தை மதிக்கவில்லை. தமிழில் பேசினால் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆனால், தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். அதுதான் உண்மை.

தமிழகத்தில் இயற்கை வளங்கள், வாய்ப்புகள் வசதிகள் அதிகம் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியை அடையவில்லை. அதற்கு காரணம் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உள்ளிட்டவை தமிழக மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களால் கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரிலும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மத்திய அரசோ பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போதைய தமிழக ஆட்சியை மோடி வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்குமானால் மக்களுக்கு தேவையானவற்றை காங்கிரஸ் கட்சி செய்யும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். அதைச் சொல்லவே இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும், மரியாதைக்கும் நன்றி என்று பேசினார்.

Tags

Next Story