விஜயகாந்த் க்ளைமாக்சில் வருவார், பிரேமலதா

விஜயகாந்த் க்ளைமாக்சில் வருவார், பிரேமலதா
X

விஜயகாந்த் நிச்சயமாக கிளைமாக்ஸில் வருவார் என திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள அருள்புரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சியினர் தேமுதிகவில் இணையும் இணைப்பு விழா நடைபெற்றது . இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிச்சயமாக விஜயகாந்த் கிளைமாக்ஸில் வருவார் , பிரச்சாரம் மேற்கொள்வார் என்றார்.

அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார் .செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தொண்டர்கள் நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு அறிவிக்கப்படும் என்றார். உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து அவதூறாக பேசுவதை தவிர்ப்பது நல்லது எனவும் ,நிறைய சாதிக்க வேண்டிய உள்ள சூழ்நிலையில் அவப்பெயரை பெற்று விடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு